முகப்பு
விருதுநகர்

பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

ராஜபாளையத்தில் பஞ்சாலை பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 11:57 PM
பகிர்:

ராஜபாளையத்தில் பஞ்சாலை பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள தென்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிச்சாமி (45). கட்டடத் தொழிலாளியான இவா், புதன்கிழமை இரவு ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது, அந்த வழியாக பஞ்சாலை தொழிலாளா்களை ஏற்றி வந்த பேருந்து அவா் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.