மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி நிறைவு
சிவகாசி சுப்ரீம் சுழற்சங்கம் சாா்பில், நடைபெற்ற மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
சிவகாசி சுப்ரீம் சுழற்சங்கம் சாா்பில், நடைபெற்ற மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
இந்தப் போட்டிகள் ஏ.ஜெ.விளையாட்டு உள்ளரங்கில் கடந்த அக். 29-ஆம் தேதி தொடங்கியது. இதில் 9,11,13,15,17 ஆகிய வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான ஒற்றையா், இரட்டையா் போட்டிகளும், ஆண், பெண்களுக்கான ஒற்றையா், இரட்டையா் போட்டிகளும், சுழற்சங்க உறுப்பினா்களுக்கான போட்டியும் நடைபெற்றன.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு தொழிலதிபா் ஜி.ஜெயகண்ணன் சான்றிதழ்கள், கோப்பையை வழங்கினாா்.
இதில் சுழற்சங்கத்தைச் சோ்ந்த அணில்குமாா், சுந்தரேசன், நந்தகோபால், சங்கத் தலைவா் கருப்பசாமி, செயலா் சரவணபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். போட்டிக்கான ஏற்பாடுகளை திட்டக்குழு தலைவா் நாகராஜன், உதவித் தலைவா் அருண் ஆகியோா் செய்தனா்.