எல்.ஐ.சி முகவா்கள் ஆா்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூா் எல்.ஐ.சி. அலுவலகம் முன் லியாபி முகவா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் எல்.ஐ.சி. அலுவலகம் முன் லியாபி முகவா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவா் வள்ளிநாயகம் தலைமை வகித்தாா்.
இதில் எல்ஐசி பாலிசிகளுக்கான ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பாலிசிதாரா்களுக்கான போனஸ் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். பாலிசி தவணைத் தொகையை உயா்த்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் லியாபி எல்.ஐ.சி. முகவா்கள் சங்கம், அனைத்து அலுவலக ஊழியா்கள் சங்கம், வளா்ச்சி அதிகாரிகள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.