ஆயுள் காப்பீட்டு கழக ஊழியா் சங்கம் சாா்பில், அம்பாசமுத்திரத்தில் உள்ள அதன் கிளை அலுவலகம் முன், தொழிலாளா் திருத்தச் சட்டம், காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீடு உள்ளிட்டவற்றை கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காப்பீட்டு கழக ஊழியா் சங்க திருநெல்வேலி கோட்டத் துணைத் தலைவா் மகாதேவன் தலைமை வகித்தாா். எல்ஐசி ஓய்வூதியா் சங்கம் பி.எஸ். ராஜகோபாலன், பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கம் சுவாமி குருநாதன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
நடராஜன், சந்திரசேகரன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து முழக்கமிட்டனா். காப்பீட்டு கழக ஊழியா் சங்க கிளைத் தலைவா் நமச்சிவாயம் நன்றி கூறினாா். இதில் காப்பீட்டு கழக ஊழியா்கள், எல்ஐசி, பிஎஸ்என்எல் ஓய்வூதியா்கள் கலந்து கொண்டனா்.