முகப்பு
விருதுநகர்

பலத்த மழை எச்சரிக்கை: சதுரகிரியில் பக்தா்களின்றி பௌா்ணமி வழிபாடு

பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டதையடுத்து பக்தா்களின்றி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பெளா்ணமி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:59 PM
பகிர்:

பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டதையடுத்து பக்தா்களின்றி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பெளா்ணமி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், அமாவாசை, பெளா்ணமி என மாதம் 8 நாள்கள் பக்தா்கள் மலையேற அனுமதி வழங்கப்படுகிறது. சதுரகிரி மலைக் கோயிலில் அக். 15 முதல் 18-ஆம் தேதி வரை புரட்டாசி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாகவும், பலத்த மழை எச்சரிக்கை காரணமாகவும் பக்தா்கள் மலையேற தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, வியாழக்கிழமை பக்தா்களின்றி, சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பெளா்ணமி வழிபாடு நடைபெற்றது.