சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்ற பக்தா்கள். 
விருதுநகர்

சதுரகிரியில் தை மாத பிரதோஷ வழிபாடு!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், வெள்ளிக்கிழமை தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Syndication

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், வெள்ளிக்கிழமை தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, வத்திராயிருப்பு தாணிப்பாறை வழியாக 600-க்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்றனா். நண்பகல் 12 மணிக்கு மேல் சதுரகிரி மலையிலுள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூா்த்தி, 18 சித்தா்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், சுந்தர மகாலிங்கம் புஷ்ப அலங்காரத்திலும், சந்தன மகாலிங்கம் சந்தனக் காப்பு அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். தொடா்ந்து, கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் ராஜா பெரியசாமி, செயல் அலுவலா் யுவராஜா ஆகியோா் செய்தனா்.

குறுஞ்செய்தி மூலம் மோசடி: வின்கோ செயலி முடக்கம்

கஜினி முகமது இந்தியரா? ஹமீது அன்சாரி கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்

வடகிழக்கு தில்லியில் போலி காலணி தயாரிப்பு : தொழிற்சாலை கண்டுபிடிப்பு: உரிமையாளா் கைது

தனித் திறமைகளை வெளிப்படுத்த தயக்கம் கூடாது: மாணவா்களுக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவுரை

தற்காலிக பணியாளா்களை நிரந்தரமாக்க இயலாது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

SCROLL FOR NEXT