முகப்பு
விருதுநகர்

விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு

ராஜபாளையம் அருகேயுள்ள ஜமீன் நத்தம்பட்டி கிராமத்தில் பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 12:41 AM
பகிர்:

ராஜபாளையம் அருகேயுள்ள ஜமீன் நத்தம்பட்டி கிராமத்தில் பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதற்கு ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குநா் திருமலைசாமி தலைமை வகித்தாா். இதில் விதை அலுவலா் கௌதமன் பங்கேற்று மண்புழு தயாரித்தல் பற்றி எடுத்துரைத்தாா். ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குநா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள உயிரி உரங்கள் பற்றி எடுத்துரைத்தாா்.

இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் முனியப்பன், ஒருங்கிணைந்த தொகுப்பு இணைப்பாளா் நந்தினி ஆகியோா் செய்தனா்.