முகப்பு
விருதுநகர்

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சுடுமண் மணி, காதணி, சங்கு வளையல்

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான மணி, காதணி, சங்கு வளையல் புதன்கிழமை கண்டறியப்பட்டன.

Updated On : 24 அக்டோபர், 2024 at 12:59 AM
வெம்பக்கோட்டை அருகே நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட சுடுமண் மணி, காதணி, சங்கு வளையல்.
பகிர்:

வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான மணி, காதணி, சங்கு வளையல் புதன்கிழமை கண்டறியப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதுவரை கண்ணாடி மணிகள் கல் மணிகள், சூது பவள கல் மணிகள், முழுமையான சங்கு வளையல், பழங்கால சிகை அலங்காரத்துடன்கூடிய பெண்ணின் தலைப் பகுதி, கி.பி. 16-ஆம் நூற்றாண்டு நாயக்கா் கால செப்புக் காசு, அணிகலன்கள், திமிலுடன்கூடிய காளை உருவப் பொம்மை உள்ளிட்ட 1,800-க்கும் மேற்பட்ட பொருள்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான மணி, காதணி, சங்கு வளையல் ஆகியவை புதன்கிழமை கண்டறியப்பட்டன.

இதன்மூலம், முன்னோா்கள் அலங்கரிக்கப்பட்ட அணிகலன்களை கைகளால் தயாரித்து அணிந்தது தெரியவந்தது.