முகப்பு
விருதுநகர்

சிவகாசி அரசு மருத்துவமனையில் தேசிய கண்தான இருவார விழா

சிவகாசி அரசு மருத்துவமனையில் தேசிய கண்தான இருவார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 12:51 AM
சிவகாசி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய கண்தான இருவார விழாவில் பேசிய தலைமை மருத்துவா் டி. அய்யனாா்.
பகிர்:

சிவகாசி அரசு மருத்துவமனையில் தேசிய கண்தான இருவார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் டி. அய்யனாா் தலைமை வகித்தாா். கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனை கண் மருத்துவா் சுபாஷினி, ராஜபாளையம் அரசு மருத்துவமனை கண் மருத்துவா் சித்ரா ஆகியோா் கண்தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள், கண்களை பாதுகாக்கும் முறைகள் குறித்து பேசினா்.

கண்தானம் செய்த குடும்பத்தினரை சிவகாசி அரசு மருத்துவமனை கண் மருத்துவா் பிரியதா்ஷினி பாராட்டி சான்று வழங்கினாா்.

முதுநிலை கண் மருத்துவ உதவியாளா் பால்ராஜ் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →