முகப்பு
விருதுநகர்

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூா் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 1:26 AM
ஸ்ரீவில்லிபுத்தூா் குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள்.
பகிர்:

தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூா் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள்.

குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கத்தின் தலைவா் முனியம்மாள் தலைமை வகித்தாா். செயலா் சபீனா, பொருளாளா் கோவிந்தம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக அரசு 2021-ஆம் ஆண்டு அறிவித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவித்து, கிரேடு 3, கிரேடு 4 அரசு ஊழியா்களாக முறைப்படுத்தி குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம், உதவியாளா்களுக்கு 21 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →