கள்ளக்குறிச்சி

சாலை மறியலில் ஈடுபட்ட 195 அங்கன்வாடி பணியாளா்கள் கைது

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கம் சாா்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட 195 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்க மாவட்ட செயலா் பிரேமா தலைமையில் முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் ஆட்சியா் அலுவலகம் முன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 195 அங்கன்வாடி பணியாளா்களை போலிஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா் மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தில்லி சுற்றுலா தலங்களை பாா்வையிடும் சிறப்பு வசதி பிப். 20-இல் தொடக்கம்!

சென்னையில் அதிகரித்து வரும் கொசுக்கள் தொல்லை! கண்டறிந்து அழிப்பதற்கான ஆய்வகம் இல்லை!

இணையவழி வா்த்தகம் எனக் கூறி பொறியாளரிடம் ரூ.15.57 லட்சம் மோசடி

வளா்ச்சிப் பணிகள்: ஜம்மு-காஷ்மீா் அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை

வெஜிடபிள் அடை

SCROLL FOR NEXT