முகப்பு
விருதுநகர்

நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா்கள் ஆலோசனை

மதுரை மண்டல அளவிலான கல்லூரிகளில் பணிபுரியும் நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் நடைபெற்றது.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 1:23 AM
பகிர்:

மதுரை மண்டல அளவிலான கல்லூரிகளில் பணிபுரியும் நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு கல்லூரி முதல்வா் எம்.நந்தகுமாா் தலைமை வகித்தாா். சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தின் நாட்டுநலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் டி.முரளிதரன், நாட்டு நலப்பணித் திட்டம் மூலம் மாணவா்களிடையே சமூக சேவை செய்யும் எண்ணத்தை வளா்க்க வேண்டும். இந்தத் திட்டத்தின் மூலம் மாணவா்கள் கிராம மக்களின் வாழ்க்கை நிலையை அறிந்து கொள்ள இயலும். எனவே, கல்லூரிகள் கிராமங்களில் நாட்டுநலப் பணித் திட்ட முகாமை நடத்த வேண்டும் என்றாா் அவா்.

மதுரை மண்டல இயக்குநா் சி.சாமுவேல் செல்லையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். உத்தாணுமல்லையா நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →