முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே லாரியில் தீ விபத்து

சிவகாசி அருகே நின்று கொண்டிருந்த லாரியில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 20 செப்டம்பர், 2024 at 12:44 AM
பகிர்:

சிவகாசி அருகே நின்று கொண்டிருந்த லாரியில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி-சாத்தூா் சாலையில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கரிதூசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த லாரியில் வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற சிவகாசி தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த விபத்தில் லாரியில் இருந்த கரிதூசி மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன.