முகப்பு
விருதுநகர்

சாலையில் தவறவிட்ட பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

சிவகாசியில் கீழே தவறவிட்ட ரூ.15 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 1:16 AM
சிவகாசியில் தவறவிட்ட ரூ.15 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த போக்குவரத்து காவலா் அனந்தவன பேச்சிமுத்து.
பகிர்:

சிவகாசியில் கீழே தவறவிட்ட ரூ.15 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வேலாயுதம் சாலையில் கிடந்த ரூ.15 ஆயிரத்தை, அந்த வழியே சென்ற போக்குவரத்துக் காவலா் அனந்தவன பேச்சிமுத்து சிவகாசி நகா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் வெற்றி முருகனிடம் ஒப்படைத்தாா்.

போலீஸாரின் விசாரணையில், அருண்குமாா் என்பவா் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, பையில் வைத்திருந்த பணத்தை தவறவிட்டது தெரிய வந்தது. போலீஸாரின் உரிய விசாரணைக்குப் பின்னா், அவரை அழைத்து ரூ.15 ஆயிரத்தை போக்குவரத்துக் காவலா் அனந்தவன பேச்சிமுத்து ஒப்படைத்தாா்.