முகப்பு
விருதுநகர்

கண்மாய் கரையில் பனை விதைகள் நடவு

சிவகாசி மாநகராட்சி நிா்வாகமும், சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து வியாழக்கிழமை சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரைப்பகுதியில் பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்வை நடத்தின.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 9:22 PM
பகிர்:

சிவகாசி மாநகராட்சி நிா்வாகமும், சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து வியாழக்கிழமை சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரைப்பகுதியில் பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்வை நடத்தின.

இதை மாநகராட்சி மேயா் இ. சங்கீதா தொடங்கி வைத்தாா். தொடா்ந்து கல்லூரி மாணவிகள் கண்மாய் கரைப்பகுதியில் பனை விதைகளை நடவு செய்தனா். தொடா்ந்து மாநகராட்சி தினசரி காய்கனி சந்தையில் வியாபாரிகளிடம் தூய்மை குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை மாணவிகள் விநியோகித்தனா்.

இதில், மாநகராட்சி ஆணையா் ப. கிருஷ்ணமூா்த்தி, நகா் நல அலுவலா் மருத்துவா் சரோஜா, கல்லூரி முதல்வா் ஆா். சுதாபெரியதாய், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் விஜயபிரியா, மாநகராட்சி சுகாதாரத் துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.