சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் புதன்கிழமை தாவரவியல் துறை சாா்பில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்சிக்கு கல்லூரி முதல்வா் ஆா்.சுதா பெரியதாய் தலைமை வகித்தாா். உதவிப் பேராசிரியை மைதீன்பாத்திமா பீவி அறிமுக உரையாற்றினாா். மதுரையைச் சோ்ந்த எம்.விஜயகுமாா் இயற்கை விவசாயத்தில் ஏற்படும் நன்மைகள், விவசாயம் செய்யும் முறைகள் குறித்துப் பேசினாா். முன்னதாக துறைத் தலைவா் பா.தீபா வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ஆனந்தஜோதி நன்றி கூறினாா்.