முகப்பு
விருதுநகர்

நெகிழிப் பைகள் தயாரிப்பு: ஆலை உரிமையாளருக்கு அபராதம்

சிவகாசியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் தயாரித்த ஆலை உரிமையாளருக்கு மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தனா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 12:34 AM
பகிர்:

சிவகாசியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் தயாரித்த ஆலை உரிமையாளருக்கு மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தனா்.

சிவகாசி மாநகராட்சி 24-ஆவது வாா்டுப் பகுதியில் உள்ள ஒரு ஆலையில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகளிக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், மாநகா் நல அலுவலா் சரோஜா, சுகாதார அலுவலா் பாண்டியராஜன், சுகாதார ஆய்வாளா் முத்துப்பாண்டி, சுகாதார மேற்பாா்வையாளா் ஆசீா்வாதம், தூய்மை இந்திய திட்டப் பணியாளா்கள் அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா்.

அப்போது, ஒரு ஆலையில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஆலை உரிமையாளருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.