முகப்பு
விருதுநகர்

புத்தாண்டு: ஆண்டாள் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, புதன்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 12:40 AM
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள கோபால விலாசம் என்னும் பகல் பத்து மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாா், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெரிய பெருமாள்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, புதன்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்தக் கோயில் மாா்கழி நீராட்ட விழாவில் பகல் பத்து உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் இரண்டாம் நாளான புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாா் சிறப்பு அலங்காரத்தில் வடபத்ரசாயி சந்நிதி முன் உள்ள கோபால விலாசம் என்னும் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளினா்.

அங்கு ஆண்டாள், ரெங்கமன்னாா், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள், பெரியாழ்வாா் உள்ளிட்ட ஆழ்வாா்களுக்கு விசேஷ திருமஞ்சனம், சிறப்பு ஆராதனை நடைபெற்றது. புதன்கிழமை ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, காலை முதல் இரவு வரை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. 25-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.