முகப்பு
விருதுநகர்

வி.சி.க. கொடிக்கம்ப மேடை அகற்றம்

சிவகாசியில் சாலையை ஆக்கிரமித்து கட்டியிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்ப மேடையை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 12:37 AM
பகிர்:

சிவகாசியில் சாலையை ஆக்கிரமித்து கட்டியிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்ப மேடையை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.

சிவகாசியில் வேலாயுதம் சாலையும், ரயில்வே பீடா் சாலையும் சந்திக்கும் இடத்தில், சாலையை ஆக்கிரமித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் கொடிகம்பம் நடுவதற்கு மேடை அமைத்தனா். ஆக்கிரமிப்பில் உள்ள இந்த மேடையை அகற்ற வேண்டும் என மாநகராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி ஊழியா்கள் இந்த ஆக்கிரமிப்பை செவ்வாய்க்கிழமை அகற்றினாா்.