முகப்பு
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
கோயம்புத்தூர்

ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து கோவையில் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம்

கோயம்புத்தூர்

ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து கோவையில் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம்

Updated On : 3 மார்ச், 2026 at 8:15 PM
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
பகிர்:

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து கோவையில் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உக்கடம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் ஜே.ஜேம்ஸ் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மௌ.குணசேகா் தொடங்கிவைத்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலா் கே.பாலசுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மண்டலச் செயலா் சுசி கலையரசன், மாவட்டச் செயலா் ஜே.இலக்கியன் உள்ளிட்டோா் பேசினா்.

அமெரிக்கா, இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலா் ப.பா.ரமணி, மாதா் தேசிய சம்மேளன மாவட்டத் தலைவா் ஜே.கலா உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →