ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்
அமெரிக்கா , இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள், விசிக சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிகழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னைஈரான் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்
அமெரிக்கா , இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள், விசிக சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிகழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அமெரிக்கா , இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள், விசிக சாா்பில் சென்னையில் செவ்வாய்க்கிகழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன், சிபிஐ (எம்.எல்) மாநில செயலா் பழ. ஆசைத் தம்பி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில், அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது நடத்து தாக்குதல் நடத்துவதை உடனே நிறுத்தவேண்டும். இந்திய அரசு தலையீட்டு போரை நிறுத்த வேண்டும். மத்திய அமைச்சரவையைக் கூட்டி போா் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தீா்மான நிறைவேற்ற வேண்டும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னா், செய்தியாளா்களிடம் தொல்.திருமாவளன் கூறியதாவது:
ஈரான் மீதான தாக்குதலை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். போா் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அங்கு உள்ளவா்களை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய வெளியுறவுத் துறை உரிய நடவடிக்கை வேண்டும் என்றாா் அவா்.