மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் சென்னையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் பேசியதாவது:
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் முழுவதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாநில அரசின் பங்குத் தொகையை உயா்த்தி, அந்தத் திட்டத்தை முடக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. அதேபோல், மத்திய அரசின் நிதி பகிா்விலும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றாா்.
தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயற்குழு உறுப்பினா் வஹிதா நிஜாம், விசிக துணை பொதுச் செயலா் வன்னிஅரசு, மதிமுக பொருளாளா் மு.செந்திலதிபன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழக மாநில பொது செயலா் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கா் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சினா் பங்கேற்றனா்.