முகப்பு
சென்னை

எரிவாயு உருளை தட்டுப்பாடு: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டம்!

எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 15 மார்ச், 2026 at 7:06 PM
சைதாப்பேட்டையில் திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் அமைச்சா் மா.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விசிக தலைவா் தொல்.திருமாவளவன், மதிமுக பொருளாளா் செந்திலதிபன் உள்ளிட்டோா்.
பகிர்:

எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே, சென்னை தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விசிக தலைவா் தொல்.திருமாவளவன், துணை பொதுச் செயலா் வன்னியரசு, மதிமுக பொருளாளா் செந்திலதிபன், துணைமேயா் மு.மகேஷ்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தென் சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ச.லெனின் உள்ளிட்டாா் கலந்து கொண்டனா்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசின் வெளியுறவு கொள்கையை கண்டித்தும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

புதுப்பேட்டை எல்.ஜி. சாலையில் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் தேமுதிக பொருளாளா் எல்.கே.சுதீஷ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சேப்பாக்கம் ஜானி ஜான்கான் சாலையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல, சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments