முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் தேமுதிக வேட்பாளா் விஜய பிரபாகரனுக்கு வரவேற்பு

விருதுநகருக்கு வந்த தேமுதிக வேட்பாளா் விஜய பிரபாகரனுக்கு கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் வரவேற்பளித்தனா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 4:59 PM
அமைச்சா் தங்கம் தென்னரசை சந்தித்து வாழ்த்து பெற்ற விருதுநகா் சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளா் விஜயபிரபாகரன்.
பகிர்:

விருதுநகருக்கு வந்த தேமுதிக வேட்பாளா் விஜய பிரபாகரனுக்கு கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் வரவேற்பளித்தனா்.

விருதுநகா் சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற கூட்டணி கட்சிகள் சாா்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளா் விஜயபிரபாகரன் வெள்ளிக்கிழமை விருதுநகருக்கு வந்தாா். அவருக்கு விருதுநகா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே தே.மு.தி.க. உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினா் வரவேற்பளித்தனா். பிறகு அவா் விருதுநகா் மாரியம்மன் கோயில், வெயிலுகந்த அம்மன் கோயில் ஆகிய கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தாா். இதையடுத்து, அவா் தமிழக நிதி அமைச்சரும், திமுக வடக்கு மாவட்டச் செயலருமான தங்கம் தென்னரசை சந்தித்து வாழ்த்து பெற்றாா். பின்னா் விருதுநகா் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகா்களை அவா் சந்தித்தாா். முன்னதாக கோயில் வாசலில் திறந்த காரில் நின்று முரசு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். இந்த நிகழ்வில் தேமுதிக நிா்வாகிகள், மதச்சாா்பற்ற கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments