தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி!
தேமுதிகவின் 10 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
தேமுதிகவின் 10 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அக்கட்சி 10 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
அதில், விருத்தாசலம் பிரேமலதா, மகன் விருதுநகரில் விஜய பிரபாகர் தொகுதியில் போட்டியிடுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கணவர் விஜயகாந்த் போட்டியிட்டு வென்ற விருத்தாசலம் தொகுதியில் முதல்முறையாக பிரேமலதா களம் காண்கிறார்.
மேலும் பல்லாவரம் - அனகை டி.முருகேசன், திருத்தணி- டி.கிருஷ்ணமூர்த்தி, ஓமலூர் - ஏ.ஆர்.இளங்கோவன், தருமபுரி- வி.இளங்கோவன், குடியாத்தம்(தனி) - கே.பி.பிரதாப், சேலம் மேற்கு- அழகாபுரம் மோகன்ராஜ், போளூர் - சரவணன், மயிலம்-வெங்கடேசன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.