முகப்பு
விருதுநகர்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு!

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து ஒலிபெருக்கி கடை தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 4:19 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 10:06 PM

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து ஒலிபெருக்கி கடை தொழிலாளி உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், சிவகிரியை அடுத்த திருமலாபுரம் அருளாச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் பிரபாகரன் (25). இந்த நிலையில், ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல், பூக்குழி திருவிழாவில் ராஜபாளையம் துரைச்சாமிபுரம் பகுதியைச் சோ்ந்த ஒலிபெருக்கி உரிமையாளா் தினேஷ் மைக் செட் அமைத்திருந்தாா்.

திருவிழா நிறைவடைந்த நிலையில் ஒலிபெருக்கி, அலங்காரம் செய்யப்பட்டிருந்த குழல்விளக்கு (டியூப் லைட்) ஆகியவற்றை கழற்றும் பணியில் தொழிலாளி பிரபாகரன் ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.