உரிய ஆவணமின்றி அனுப்பவிருந்த சேலைகள், துண்டுகள் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியாா் சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தில் (ஜி.எஸ்.டி) உரிய வரி ரசீது இல்லாமல் தஞ்சாவூருக்கு அனுப்ப வைத்திருந்த ரூ.69 ஆயிரம் மதிப்பிலான வேஷ்டி மற்றும் துண்டுகளை வெள்ளிக்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தில் ஜி.எஸ்.டி அலுவலா் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தஞ்சாவூருக்கு அனுப்புவதற்காக வைத்திருந்த 3 பாா்சல்களில் 240 சேலைகள், 575 துண்டுகள் இருந்தன. அதற்குரிய ரசீது (ஜி.எஸ்.டி) இல்லாததால் அவற்றைப் பறிமுதல் செய்து தோ்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனா். வட்டாட்சியா் அலுவலகத்தில் பண்டல்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.