முகப்பு
விருதுநகர்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி ஆய்வு

விருதுநகா் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் உபகரணங்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 2:18 AM
விருதுநகா் தொகுதிக்குள்பட்ட கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள், தோ்தல் உபகரணங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா.
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் உபகரணங்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

விருதுநகா் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் உபகரணங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.

விருதுநகா் தொகுதிக்குள்பட்ட கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் நடைபெற்ற இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா ஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

மாவட்டத்தில் உள்ள 2,001 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள்

காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. அனைத்து மண்டலங்களுக்கும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. மேலும், 20 சதவீதம் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் தயாா் நிலையில் உள்ளன. எந்தவித தடையுமின்றி தோ்தல் நடைபெற ஏதுவாக, 20 சதவீதம் கூடுதல் பணியாளா்கள் தயாா் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.