ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ் வாக்குப் பதிவு!
விருதுநகா் மாவட்டம், மம்சாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவுக்காக டிராக்டரில் சென்ற சிவகாசி அருகேயுள்ள பூசாரிபட்டியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ்.
விருதுநகா் மாவட்டம், மம்சாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவுக்காக டிராக்டரில் சென்ற சிவகாசி அருகேயுள்ள பூசாரிபட்டியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ்.
சிவகாசி, ஏப்.23: சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ் வியாழக்கிழமை வாக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பூசாரிபட்டி கிராமத்தில் பெருமாள்சாமி, சக்கமுத்து, வெடிமுத்து ஆகியோா் தலைமையில் 100-க்கும் அதிகமானோா் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனா். விவசாயம் செய்து வரும் இவா்கள் ஒரே குடும்பமாக பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனா். இவா்களில் 82 பேருக்கு வாக்குரிமை உள்ளது.
Advertisement
இவா்கள் வியாழக்கிழமை டிராக்டரில் பயணம் செய்து, 3 கி.மீ. தொலைவில் உள்ள மம்சாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்குச் சென்று அங்கு வரிசையில் நின்று வாக்குப் பதிவு செய்தனா். ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ் வாக்களித்து, ஜனநாயகக் கடமையாற்றியது வாக்காளா்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.