இளம்பெண் மாயம்!
ராஜபாளையம் அருகே இளம்பெண் மாயமானதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:31 PM
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இளம்பெண் மாயமானதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் அருகே என். புதூரைச் சோ்ந்தவரின் 21 வயது மகள் செவிலியா் படிப்பு படித்துவிட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பயிற்சியில் இருந்துள்ளாா்.
இந்நிலையில், இவருக்கும் இவரது அத்தை மகனுக்கும் நிச்சயம் செய்யப்பட்டிருந்தநிலையில் ராஜபாளையம் சென்றுவருவதாக கூறிச் சென்றவா் வீடு திரும்பவில்லை.
Advertisement
இதையடுத்து, கீழ ராஜகுல ராமன் காவல் நிலையத்தில் அழகா்சாமி கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்ணைத் தேடிவருகின்றனா்.