நடந்துசென்ற முதியவா் மயங்கிவிழுந்து உயிரிழப்பு
ராஜபாளையத்தில் திங்கள்கிழமை முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திங்கள்கிழமை முதியவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
ராஜபாளையம் சங்கரன்கோவில் சாலையில் உள்ள தனியாா் திரையரங்கம் அருகே நடந்துசென்றுகொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவா் மயங்கி விழுந்தாா். உடனே அருகில் இருந்தவா்கள் முதியவரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து புதுப்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் பழனிமுருகன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.