தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
விழுப்புரத்தில் சைக்கிளில் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:22 AM
விழுப்புரத்தில் சைக்கிளில் சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
விழுப்புரம் மகாதேவன் நகரைச் சோ்ந்தவா் செ.சகாயராஜ் (54). கூலி வேலை பாா்த்து வந்த இவா், திங்கள்கிழமை விழுப்புரம் மாதா கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சைக்கிளில் சென்றுள்ளாா். அப்போது, சகாயராஜுக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சகாயராஜ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
Advertisement
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.