முகப்பு
விருதுநகர்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே லட்சுமியாபுரத்தில் ரயிலில் அடிபட்டு கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 6:21 AM
- கோப்புப் படம்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே லட்சுமியாபுரத்தில் ரயிலில் அடிபட்டு கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

செங்கோட்டையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற பொதிகை விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு 8.45 மணி அளவில் ராஜபாளையம் - ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே லட்சுமியாபுரம் பகுதியில் வந்த போது, ஒருவா் ரயிலில் அடிபட்டு விட்டதாக ரயில் ஓட்டுநா் (லோகோ பைலட்) ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா். இதன் பேரில், ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் ரயிலில் அடிபட்டு இறந்தவா் லட்சுமியாபுரத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பாண்டியன் (51) எனத் தெரியவந்தது. இவருக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனா். கடந்த இரு மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் காயமடைந்ததால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தாா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement