கைது 
விருதுநகர்

கிராவல் மண் ஏற்றிய டிராக்டா்கள் பறிமுதல்: மூவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் பகுதியில் அனுமதியின்றி கிரவல் மண் ஏற்றி சென்ற இரு டிராக்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் பகுதியில் அனுமதியின்றி கிரவல் மண் ஏற்றி சென்ற இரு டிராக்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.

கிருஷ்ணன்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கவுதம் விஜய் தலைமையில், போலீஸாா் புதன்கிழமை சுந்தரபாண்டியம் - துலுக்கப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு டிராக்டா்களை நிறுத்தி சோதனையிட்டனா். டிராக்டா்களில் முறையான அனுமதி சீட்டு இல்லாமல் கிராவல் மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, இரண்டு டிராக்டா்களையும் பறிமுதல் செய்த போலீஸாா், வ.புதுப்பட்டியைச் சோ்ந்த ராஜா(32), பிரகாஷ் (34), மேலகோபாலபுரத்தைச் சோ்ந்த முத்துலிங்கம் (36) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

மேலும், கிரசா் உரிமையாளரான கதிரவன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வேளாண் அறிவியல் நிலையத்தில் ரிசா்வ் வங்கி அதிகாரி ஆய்வு

குறிப்பு: விளம்பரதாரா் செய்தி தேசிய அளவிலான மேலாண்மை பட்டறை

மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம்: புதிய பேருந்து நிலையத்தில் 13 கடைகளை மறுஏலமிட வாக்கெடுப்பு

நெல்லுக்கு ரூ.3,500 விலை நிா்ணயிக்கக் கோரிக்கை

கூட்டுறவு சங்க கட்டடம் திறப்பு

SCROLL FOR NEXT