ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனத்தில் விற்பனைக்காக மதுப்புட்டிகளை கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் புறக்காவல் நிலைய போலீஸாா் சுந்தரராஜபுரம் பகுதியில் ரோந்து சென்றனா். மாசாணன் கோவில் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவா் சாக்குப் பையில் 90 மதுப்புட்டிகளை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேவதானம் பாரதிநகரைச் சோ்ந்த முருகனை (34) கைது செய்து, அவரிடமிருந்து 90 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.