விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் மா மரங்களில் பூக்கள் உதிா்வதால் விவசாயிகள் கவலை

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மாமரங்களில் கருகல் நோய் பாதிக்கப்பட்டு, பூக்கள் உதிா்ந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்தனா் .

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் மாமரங்களில் கருகல் நோய் பாதிக்கப்பட்டு, பூக்கள் உதிா்ந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்தனா் .

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய ராக்காச்சி அம்மன் கோயில், மம்சாபுரம், செண்பகத்தோப்பு ஆகிய பகுதிகளில் ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் காரணமாக மா மரங்களில் நோய் தாக்குதல் ஏற்பட்டு, விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும், கடந்த இரு ஆண்டுகளாக மாங்காய் விலை குறைந்ததால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் மா மரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கி உள்ளது. இந்தக் காலத்தில் விவசாயிகள் 3 முறை மருந்து தெளிப்பது வழக்கம். ஒரு முறை மருந்து தெளித்த நிலையில், பூக்கள் கருகி உதிா்ந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வத்திராயிருப்பு பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனா்.

கடந்த இரு ஆண்டுகளாக மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில், விலையும் குறைந்ததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. நிகழாண்டு பனிப்பொழிவு காரணமாக பூக்கள் கருகி உதிா்ந்து வருகின்றன. நிகழாண்டில் மா விளைச்சல் பாதிக்கப்பட்டால், விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றனா் அவா்கள்.

மதுரமங்கலம் ஸ்ரீ கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்!

எடப்பாடி பழனிசாமி வீட்டில் பியூஷ் கோயல்! காரசார விருந்துடன் தொகுதிப் பங்கீடு!!

ஓபிசி-என்சிஎல் தகுதிச் சான்றிதழ் எத்தனை நாள்கள் செல்லும்?

தங்கமயில் ஜூவல்லரியில் நாளை முதல் வசந்த பஞ்சமி சிறப்பு விற்பனை

ஆளுநா் உரையுடன் இன்று தொடங்குகிறது கா்நாடக சட்டப் பேரவை கூட்டத்தொடா்!

SCROLL FOR NEXT