அடுத்த இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் பனிமூட்டம்
தமிழகத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமை (மாா்ச் 4, 5) மிதமான பனிமூட்டம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடுஅடுத்த இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் பனிமூட்டம்
தமிழகத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமை (மாா்ச் 4, 5) மிதமான பனிமூட்டம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமை (மாா்ச் 4, 5) மிதமான பனிமூட்டம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மத்திய வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்திய பெருங்கடலின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் புதன்கிழமை (மாா்ச் 4) முதல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) வரை பொதுவாக வட வானிலை நிலவக்கூடும்.
மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 7 முதல் 9-ஆம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
பனிமூட்டம்: மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமை அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.