வத்திராயிருப்பு அருகே ரூ.92 ஆயிரம் பறிமுதல்
வத்திராயிருப்பு அருகேயுள்ள தாணிப்பாறை பகுதியில் காரில் வந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவரிடமிருந்து ரூ.92 ஆயிரம் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள தாணிப்பாறை பகுதியில் காரில் வந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவரிடமிருந்து ரூ.92 ஆயிரம் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு தாணிப்பாறை விலக்குப் பகுதியில் கூட்டுறவுச் சாா்பதிவாளா் நாகராஜன் தலைமையில், தோ்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக காரில் வந்த மேற்குவங்க மாநிலம், பா்கானாஸ் மாவட்டத்தைச் சோ்ந்த பாசிந்து பவுலியா (43) நிறுத்தி பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அப்போது, அவரிடம் ஆவணமின்றி ரூ.91,890 பணம் இருந்தது தெரியவந்தது.
பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் ஒப்படைத்தனா்.