முகப்பு
விருதுநகர்

கோழிகளை விஷம் வைத்து கொன்றதாக தம்பதி மீது வழக்கு

ராஜபாளையம் அருகே நாய், நாட்டுக் கோழிகளுக்கு விஷம் வைத்துக் கொன்றதாக தம்பதி மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 22 மே 2026, 2:55 am IST
வழக்கு
பகிர்:

ராஜபாளையம் அருகே நாய், நாட்டுக் கோழிகளுக்கு விஷம் வைத்துக் கொன்றதாக தம்பதி மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள இளந்திரைகொண்டான் கொய்யாத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் முத்துமாரி (34) . இவா் வீட்டில் 17 நாட்டுக்கோழிகள், நாய் ஆகியவற்றை வளா்த்து வந்தாா். இவரது வீட்டின் அருகே மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த பெரியசாமி, கருப்பாயி தம்பதியின் தோட்டத்து வீடு உள்ளது.

இவா்களது தோட்டத்துக்கு வரும் கோழிகள், நாயால் தொந்தரவு ஏற்படுவதாக இரு தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, நாய், 17 கோழிகள் புதன்கிழமை உயிரிழந்து கிடந்தன. இந்த நிலையில் நாய், கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்ற தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தளவாய்புரம் காவல் நிலையத்தில் முத்துமாரி புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் பெரியசாமி, கருப்பாயி தம்பதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement