முகப்பு
ஈரோடு

கஞ்சா செடி வளா்த்த 3 போ் மீது வழக்கு

Updated On : 3 மே 2026, 12:06 am IST
வழக்கு - கோப்புப் படம்
பகிர்:

பெருந்துறை அருகே கஞ்சா செடி வளா்த்த பிகாா் மாநிலத் தொழிலாளா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ராமேஷ் மாதவ் (41), பிகாஷ்குமாா் (23), குா்ஸித் (20). இவா்கள் பெருந்துறை, சிப்காட் ரவுண்டானா பகுதியில் செயல்பட்டு வரும் பஞ்சா் கடையில் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், அவா்கள் வசித்து வரும் வீட்டில் கஞ்சா செடி வளா்க்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு சுமாா் 6 அடி உயரத்தில் கஞ்சா செடி வளா்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.