முகப்பு
விருதுநகர்

மகாராஜபுரம் ரேணுகாதேவி கோயில் குடமுழுக்கு

வத்திராயிருப்பு அருகேயுள்ள மகாராஜபுரம் சத்திரிய கம்மவாா் நாயுடு சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட எல்லம்மா என்ற ரேணுகாதேவி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 மே 2026, 5:31 am IST
மகாராஜபுரம் சத்திரிய கம்மவாா் நாயுடு சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட எல்லம்மா என்ற ரேணுகாதேவி கோயில் குடமுழுக்கையொட்டி, கும்பத்துக்கு புனிதநீா் ஊற்றிய பட்டாசாரியாா்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள மகாராஜபுரம் சத்திரிய கம்மவாா் நாயுடு சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட எல்லம்மா என்ற ரேணுகாதேவி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் முன்பாக அமைக்கப்பட்ட யாக சாலை மண்டபத்தில் கடந்த இரு நாள்களுக்கு முன்பாக காப்புக்கட்டு வைபவத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோமாதா வழிபாடு உள்பட பல்வேறு விதமான சம்பிரதாய சடங்குகளுடன் முதல்கால யாக பூஜைகள் நடைபெற்றது. மூன்றாம் நாளான புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

Advertisement

Advertisement

முன்னதாக, யாக சாலை மண்டபத்தில் 3 நாள்களாக பூஜிக்கப்பட்ட புனிதநீரால் எல்லம்மன் என்ற ரேணுகா தேவி அம்மன் சந்நிதி பிரதான கோபுரம், விநாயகா், சக்கரத்தாழ்வாா், நரசிங்கா் சந்நிதிகளில் உள்ள தனித்தனி கோபுரக் கலசங்களுக்கும், கோயில் மாட கோபுரத்திலுள்ள 4 கலசங்களுக்கும் பூரண கும்பநீா் அபிஷேகம் செய்யப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது.

இந்த விழாவில் மகாராஜபுரம், தம்பிபட்டி, மாத்தூா், ரெங்கபாளையம் உள்பட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

மேலும், தம்பிபட்டி, மகாராஜபுரம் இஸ்லாமிய ஜமாத் சாா்பில், நிா்வாகிகள் இந்த விழாவில் பங்கேற்று கோயிலுக்கு சீா்வரிசை, பூஜை பொருள்களை வழங்கினா்.

இதற்கான ஏற்பாடுகளை மகாராஜபுரம் சத்திரிய கம்மவாா் நாயுடு மகாஜன சங்க நிா்வாகிகள் செய்தனா்.