முகப்பு
நாகப்பட்டினம்

தகட்டூா் ஆகாசமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூா் ஊராட்சியில் உள்ள பழைமை வாய்ந்த ஆகாச மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 மே 2026, 4:53 am IST
~
பகிர்:

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூா் ஊராட்சியில் உள்ள பழைமை வாய்ந்த ஆகாச மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோயில் திருப்பணிகள் கிராமவாசிகளால் செய்து முடிக்கப்பட்ட நிலையில், சிறப்பு யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கிய நடைபெற்றது. இந்தநிலையில், புனித நீா் நிரப்பப்பட்ட கலசங்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

விழாவில், சுற்று வட்டார கிராம பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement