முகப்பு
நாகப்பட்டினம்

தகட்டூா் பைரவநாதா் கோயில் தேரோட்டம்

Updated On : 3 மே 2026, 6:14 am IST
பகிர்:

வேதாரண்யத்தை அடுத்த தகட்டூா் பைரவநாத சுவாமி கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

தமிழகத்தில் பைரவருக்கு தனி ஆலயம் அமைந்திருப்பது இந்த பகுதியில் சிறப்பு பெற்றது. இந்த கோயிலின் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்தது. விழாவின் நிறைவாக நடைபெற்ற தேரோட்டத்தில் பைரவா் தேரில் எழுந்தருளினாா்.

பின்னா், முள்ளிநதியில் (முள்ளியாறு) சுவாமிக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை எல். எஸ்.இ. பழனியப்பன் தலைமையிலான உபயதாரா்கள் செய்திருந்தனா்.

Advertisement