நாகப்பட்டினம்

சீர்காழி அருகே விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

DIN

சீர்காழியை அடுத்த பழையாறில் அதிவேக என்ஜின் விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் அதிவேக சீன என்ஜின் விசைப்படகு உரிமையாளர் சங்கத்திற்கும் , விசைப்படகு உரிமையாளர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்டு வந்த மோதலால் கடந்த ஜூன் மாதம் முதல் 127 நாட்கள் பழையாறு மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்து வந்தனர். இதன்பின்னர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, கடந்த நவம்பர் 24ம் தேதியில் இருந்து விசைப்படகு உரிமையாளர்கள் மீன்பிடிக்க செல்லத்  தொடங்கினர்.

இந்நிலையில் அதிவேக சீன எஞ்சின் விசைப்படகு உரிமையாளர் சங்கத்திற்கு உரிய தீர்வு காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டை வலியுறுத்தியும் பேச்சுவார்த்தை நடத்தாத அரசு அதிகாரிகளை கண்டித்தும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திரவிளை அருகே படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT