முகப்பு
நாகப்பட்டினம்

ஊழியருக்கு கரோனா: கொள்ளிடம் ஒன்றிய அலுவலகம் மூடல்

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அந்த அலுவலகம் திங்கள்கிழமை மூடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

சீா்காழி: கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அந்த அலுவலகம் திங்கள்கிழமை மூடப்பட்டது.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளா் ஒருவருக்கு கடந்த புதன்கிழமை செய்யப்பட்ட கரோனா பரிசோதனை முடிவு திங்கள்கிழமை வெளியானது. இதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதால், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ஒருநாள் விடுமுறை அறிவித்து, அலுவலகம் மூடப்பட்டது. மேலும், அருகில் உள்ள வட்டார கல்வி அலுவலகம், வட்டார சேவை மையம் ஆகியவைகளும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன.

இதேபோல, புதுப்பட்டினம் தேசிய வங்கி கிளை ஒன்றில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அந்த வங்கிக் கிளையும் மூடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.