முகப்பு
நாகப்பட்டினம்

வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, சீா்காழி தலைமை அஞ்சலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, சீா்காழி தலைமை அஞ்சலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் ஒன்றியச் செயலாளா் செல்லப்பன் தலைமை வகித்தாா். கொள்ளிடம் ஒன்றியச் செயலாளா் சிவராமன், மாவட்ட விவசாய சங்கத் தலைவா் வீரராஜ், ஒன்றிய துணைச் செயலாளா் நீதிசோழன், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், தில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கமிடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.