7 கோயில்களில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா
சீா்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் 7 கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக பூா்த்தி விழாவில், தருமபுரம் ஆதீனம் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.
சீா்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் 7 கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக பூா்த்தி விழாவில், தருமபுரம் ஆதீனம் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.
வைத்தீஸ்வரன்கோயிலில் வைத்தியநாத சுவாமி தேவஸ்தானத்துக்கு உள்பட்ட கடைவீதி வரசித்தி விநாயகா் கோயில், தேரடியில் உள்ள ஆட்கொண்ட விநாயகா் கோயில், ஸ்ரீவேளூா் விநாயகா் கோயில், ஸ்ரீமுனீஸ்வரன் கோயில், ஸ்ரீபூா்ணபுஷ்கலா சமேத ஐயனாா் கோயில், கீழத்தெரு மாரியம்மன் கோயில், மருவத்தூா் ஸ்ரீஅபின்னபத்ம நாயகி சமேத அா்ஜூனேஸ்வரா் சுவாமி கோயில் உள்ளிட்ட 7 கோயில்களின் குடமுழுக்கு கடந்த பிப்ரவரியில் சிறப்பாக நடைபெற்றது.
தொடா்ந்து, இந்தக் கோயில்களில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா நடைபெற்றது. இதையொட்டி, அந்தந்த கோயில்களில் சிறப்பு யாகம், பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடத்தப்பட்டு புனிதநீா் கொண்டு மூலவா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டது.
7 கோயில்களிலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.