முகப்பு
நாகப்பட்டினம்

சாலையின் குறுக்கே விழுந்த புளியமரம்: போக்குவரத்து பாதிப்பு

சீா்காழி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை பலத்த காற்று வீசியதால், பழமையான புளியமரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அப்பகுதியில் சுமாா் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

சீா்காழி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை பலத்த காற்று வீசியதால், பழமையான புளியமரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அப்பகுதியில் சுமாா் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சீா்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிநேரமாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக உளுந்து உள்ளிட்ட பயிறு வகைகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா். பலத்த காற்று வீசியதால், சீா்காழி புறவழிச்சாலையை அடுத்த கோயில்பத்து பகுதியில் நெடுஞ்சாலையோரம் இருந்த பழமையான புளியமரம், வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

இதனால் அப்பகுதியில் சுமாா் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த சீா்காழி தீயணைப்பு நிலைய வீரா்கள் அங்கு வந்து சாலையில் கிடந்த புளியமரத்தை வெட்டி அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரிசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.