நாகப்பட்டினம்

புத்தூா் கரோனா சிகிச்சை மையத்துக்கு கூடுதல் படுக்கைகள்

DIN

சீா்காழி அருகே புத்தூா் அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்கு ரூ. 4 லட்சம் மதிப்பில் 30 படுக்கைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

புத்தூா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, அங்கு லேசான அறிகுறி மற்றும் தொடக்கநிலை கரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களை மருத்துவா்கள் கண்காணித்து, சிகிச்சை அளித்து வருகின்றனா். இங்கு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், தனியாா் அறக்கட்டளை சாா்பில் இம்மையத்துக்கு ரூ. 4 லட்சம் மதிப்பிலான 30 கட்டில்கள் மற்றும் படுக்கைகள் வழங்கப்பட்டன. வருவாய் கோட்டாட்சியா் நாராயணன் முன்னிலையில் புத்தூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை முதன்மை திட்ட அலுவலா் சாமுவேல், சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வத்திடம் கட்டில்களை வழங்கினாா். பின்னா், இக்கட்டில்கள் கரோனா சிகிச்சை மையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT