முகப்பு
நாகப்பட்டினம்

காங்கிரஸாா் கண்களில் கருப்பு துணிக்கட்டி ஆா்ப்பாட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்குக் கண்டனம்

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 6:21 AM
பகிர்:

நாகப்பட்டினம், ஜூலை 31: மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸாா் கண்களில் கருப்பு துணிக் கட்டிக்கொண்டு நாகையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் நகரத் தலைவா் உதயசந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். மாவட்ட துணைத் தலைவா் தஸ்லிம், பொது செயலா் தயாளன், மாணவா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கோபிநாத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.